நடுரோட்டில் செம ஆட்டம் போட்ட 'லியோ' நடிகை.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,February 19 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் நடிகை ஒருவர் காளகஸ்தியில் நடு ரோட்டில் கொட்டடிக்கும் இசைக்கேற்ப ஆட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் த்ரிஷா மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் நடிகை அபிராமி வெங்கடாசலம் இணைந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு ஆந்திராவில் உள்ள காளகஸ்தி கோவிலுக்கு சென்ற அபிராமி வெங்கடாசலம் அங்கு தெருவில் கொட்டு அடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுடன் சேர்ந்து செம ஆட்டம் ஆடினார். அபிராமியுடன் ரசிகர்கள் சிலர் செல்பி எடுத்துக் கொண்டார்.

இது குறித்து அபிராமி வெங்கடாசலம் தனது சமூக வலைத்தளத்தில் கூறிய போது ’காளகஸ்தியில் சிவராத்திரி கொண்டாடி வருகிறேன், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, தென்னாட்டுடைய சிவனை தரிசனம் செய்துவிட்டு இங்கு இருந்து நேராக காஷ்மீருக்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.