'விஷால் 34' படத்தில் இணைந்த 'லியோ' பிரபலம்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Monday,October 16 2023]

விஷால் நடித்த ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ’விஷால் 34’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். ’தாமிரபரணி’ ’பூஜை’ ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது முறையாக ஹரி மற்றும் விஷால் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் மேலும் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பிரபல இயக்குனரும் விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவருமான கௌதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொருவர் இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி.

இயக்குனர்கள் கெளதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இந்த படத்தில் இணைந்துள்ளதை உறுதி செய்யும் வகையில் ஒரு புகைப்படத்தை விஷால் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.