ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் படத்தை உறுதி செய்த 'லியோ' பிரபலம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஜினியின் 171 வது படத்தை இயக்குவது லோகேஷ் கனகராஜ் தான என ‘லியோ’ படத்தில் நடித்து வரும் பிரபலம் உறுதி செய்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜெயிலர்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ’லால் சலாம்’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவரது 170 வது படம், ‘ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் ரஜினியின் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படம் தான் ரஜினியின் கடைசி படம் என்றும் கூறப்பட்டது. இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிந்து வந்தாலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது உள்பட இன்னும் எந்த ஒரு தகவலும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் ’லியோ’ படத்தை முடித்ததும் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் படத்தை தான் இயக்கி இருக்கிறார் என்பதை ’லியோ’ படத்தில் நடித்த நடிகரும் பிரபல இயக்குனருமான மிஷ்கின் உறுதி செய்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் ரஜினியின் படம் தான் என்று கூறியுள்ளதை அடுத்து ’தலைவர் 171’ திரைப்படத்தை லோகேஷ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் ’லியோ’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறிய போது ’விஜய் நடித்த யூத் படத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அவர் வளர்ந்து வரும் ஒரு ஸ்டாராக இருந்தார். இப்போது அவர் இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவர். நான் ’லியோ’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்ற போது என்னை கட்டிப்பிடித்து வரவேற்றார். அப்போது நான் அவரை ஒரு நட்சத்திரம் போல் பார்க்கவில்லை, ஒரு குழந்தையாகவே அவர் எனக்கு தெரிந்தார்’ என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com