பண்டையக் காலத்தில் பெண் கல்வி இருந்ததா? பதில் சொல்லும் ஒற்றைச் சிற்பம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பண்டையக் காலத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா? என்ற கேள்வியை இன்றைக்கும் சில வரலாற்று அறிஞர்கள் எழுப்பி வருகின்றனர். காரணம் என்னதான் நம்முடைய சங்க இலக்கியத்தில் 43 பெண் புலவர்கள் பாடல்களைப் பாடியிருந்தாலும் அதன் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறதே? என்று குறைவாக மதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பண்டையக் காலக்கட்டத்தில் பெண் கல்விக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதற்கான சான்று தற்போது கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு கோவிலில் கண்டறியப்பட்டு இருக்கிறது. பதார் எனும் மாவட்டத்தில் உள்ள ஜலசங்வி ஈஸ்வரன் கோவிலில் உள்ள ஒரு சிற்பமானது, ஒரு பெண் பலகையைப் பிடித்து எழுதுவது போன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. லேகா சுந்தரி என அழைக்கப்படும் இந்தச் சிற்பத்தில் உள்ள பெண் ஒரு கையில் எழுதுகோலையும் இன்னொரு கையில் ஏட்டுச் சுவடியையும் பிடித்துக் கொண்டு இருக்கிறாள்.
ஜலசங்வியில் உள்ள சிவன் கோவில் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த ஆறாம் விக்ரமாதித்யன் காலத்தில் கி.பி.1076-1226 காலத்தில் கட்டப்பட்டு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ஏட்டைப் பிடித்து எழுதும் பெண்ணின் சிற்பம் கி.பி.1110 ஆம் ஆண்டு எனவும் அறிஞர்கள் கணித்துள்ளனர். மேலும் ஜலசங்வி கோவிலில் பல சிற்பங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் ஒரு பெண் கையில் ஏட்டைப் பிடித்துக் கொண்டு எழுதுகோலை வைத்து எழுதுவது வரலாற்றில் மிகவும் பொக்கிஷமான சிற்பாகப் பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் பண்டையக் காலக்கட்டத்தில் பெண்களும் கல்வியறிவு பெற்றிருக்கின்றனர் என்பதும் நிரூபனமாகி இருக்கிறது. மேலும் கன்னட மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த சிற்பத்தின் ஏட்டில் “சாளுக்கிய வம்சத்தின் விக்ரமாதித்யன் ஏழு பெருங்கடல்களுக்கு நடுவே நிலத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்கிறான்” எனக் குறிப்பிடப்பட்டு இருப்பதாக ஆய்வறிஞர்கள் தெரிவித்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments