பழம்பெரும் படத்தொகுப்பாளர் காலமானார்

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

கடந்த 1980ஆம் ஆண்டுகளில் முன்னணி படத்தொகுப்பாளராக இருந்த பழம்பெரும் எடிட்டர் டி.ஆர்.சேகர் காலமானார். அவருக்கு வயது 81

திருச்சியில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த 80ஆம் ஆண்டுகளில் பல முன்னணி இயக்குனர்களின் படங்களை இவர் எடிட்டிங் செய்துள்ளார். குறிப்பாக தமிழ், மலையாள மொழியில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பாசில் படங்கள் அனைத்திற்கும் இவர்தான் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது

கண்ணுக்குள் நிலவு, காதலுக்கு மரியாதை, கிளிப்பேச்சு கேட்கவா, அரங்கேற்றவேளை, என் பொம்முகுட்டி அம்மாவுக்கு, பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே போன்ற பல வெற்றி படங்களை இவர் எடிட்டிங் செய்துள்ளார்.

டி.ஆர்.சேகர் அவர்களின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு திருச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.

More News

சிம்பு, விஷால் உறவில் திடீர் திருப்பம்

கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தல் நடந்தபோது சிம்பு மற்றும் விஷால் எதிரெதிர் அணியில் போட்டியிட்டு ஒருவரை ஒருவர் காரசாரமாக விமர்சனம் செய்தனர்.

ரஜினியை சந்தித்து வேலைநிறுத்தம் குறித்து விளக்குவேன்: விஷால்

திரையுலகினர்களின் தொடர் வேலைநிறுத்தம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகர் விஷால், விரைவில் ரஜினியை சந்தித்து விளக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

விக்னேஷ்சிவனுடன் இணைந்து விஸ்வரூப திட்டம் போடும் நயன்?

காதல் ஜோடியாக அமெரிக்கா உள்பட பல நாடுகளுக்கு பறந்துவரும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும்

கணவர்களை துரத்தாதீர்கள், நடிகைகளுக்கு ஞானவேல்ராஜா மனைவி எச்சரிக்கை

திருமணம் ஆகாத எத்தனையோ இளைஞர்கள் திருமணத்திற்கு தயாராக இருக்கும் நிலையில் ஒருசில நடிகைகள், திருமணமானவர்களை குறிவைத்து குடும்பத்தை உடைப்பதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் இருந்து வரும்

டிஜிபி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற காவலர்கள்: சென்னையில் பரபரப்பு

மன உளைச்சல் காரணமாக காவலர்கள் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில் இன்று இரண்டு காவலர்கள் சென்னை டிஜிபி அலுவலகம் முன்பே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது