சூப்பர் ஹீரோக்களின் படைப்பாளி ஸ்டேலீ காலமானார்.
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகப்புகழ் பெற்ற சூப்பர் ஹீரோக்களை காமிக்ஸ்ஸில் உருவாக்கிய ஸ்டேன் லீ என்ற உலகப்புகழ் பெற்ற கிரியேட்டர் உடல்நிலை குறைபாடு காரணமாக காலமானார். அவருக்கு வயது 95. ஸ்டேன் லீ மறைவால் அவரது ரசிகர்கள் சோகாமயமாக்கியுள்ளனர்.
அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, பிளாக் பாந்தர், ஸ்பைடர் மேன், ஹல்க், எக்ஸ் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீ, கடந்த சில நாட்களாக நிமோனியா நோயால் பாதிக்கபட்டிருந்தார். இதனால் அவருக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலைமையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்டேன் லீ, சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1961 ஆம் ஆண்டு 'பேன்டாஸ்டிக் போர்' காமிக்ஸை ஜேக் கிர்பி என்பவருடன் இணைந்து, முதல் முறையாக வடிவமைத்தார். அதனை தொடர்ந்து ஸ்பைடர் மேன், பிளாக் பாந்தர், ஹல்க் உள்ளிட்ட பிரபல காமிக்ஸ்களை உருவாக்கி, இந்த காமிக்ஸ்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்ட போது அவற்றில் பணிபுரிந்ததோடு, அந்தப் படங்களில் ஒருசில நொடிகள் மட்டும் தோன்றும் சிறப்புத் தோற்றத்திலும் ந்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான அவென்ஜர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான் என்ற படத்திலும் ஒரே ஒரு காட்சியில் ஸ்டேன்லீ நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout