கமல், ரஜினி படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் காலமானார்.

  • IndiaGlitz, [Tuesday,October 24 2017]

ரஜினிகாந்த் நடித்த 'காளி', கமல்ஹாசன் நடித்த குரு' உள்பட பல தமிழ், மலையாளம் இந்தி படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் ஐ.வி.சசி காலமானார். அவருக்கு வயது 69

கேரள மாநிலம் கோழிக்கோடு என்ற நகரை சேர்ந்த இவர் கடந்த 1968ஆம் ஆண்டு 'கலியல்ல கல்யாணம்' என்ற படத்தை முதன்முதலில் இயக்கினார். இவர் இயக்கிய தமிழ் படங்களில் 'காளி', 'அலாவுதீனும் அற்புத விளக்கும்', 'பகலில் ஓர் இரவு', 'ஒரே வானம் ஒரே பூமி', 'குரு', 'எல்லாம் என் கைராசி', போன்ற படங்கள் நல்ல வெற்றியை பெற்றது.

இவரது பல படங்களில் நாயகியாக நடித்த நடிகை சீமாவை இவர் கடந்த 1980ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு அனு என்ற மகளும், அனி என்ற மகனும் உள்ளனர். அனி தற்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறார்

மறைந்த இயக்குனர் சசி அவர்களுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More News

கொஞ்சம் பார்த்து செய்யுங்க சார்! எச்.ராஜாவை கிண்டல் செய்யும் இயக்குனர்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கோடிக்கணக்கில் புரமோஷனுக்காக செலவு செய்தது. ஆனால் அந்த புரமோஷன் செய்யாத பரபரப்பை தமிழக பாஜக தலைவர்கள் ஏற்படுத்தினார்கள்.

மாஸ் ஸ்டார் என்பதை நிரூபித்துவிட்டார் விஜய்: பிரபல எழுத்தாளர்

ரிலீசுக்கு முன்பும், ரிலீசுக்கு பின்பும் சோதனைகளை சாதனைகளாக மாற்றி வெற்றி நடை போட்டு வரும் தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு அனைத்து  துறைகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருவதை

இவர்தான் உண்மையான 'மெர்சல்' டாக்டர்

சமீபத்தில் வெளியான 'மெர்சல்' படத்தில் தளபதி விஜய் ஐந்து ரூபாய் டாக்டர் மாறன் கேரக்டரில் நடித்திருப்பார். இப்படி ஒரு டாக்டர் உண்மையில் இருந்தால் எப்படி இருக்கும்

நெல்லை தீக்குளிப்பு மரணம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட நால்வர் தீக்குளித்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது.

அதர்வாவின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றி பட இயக்குனர்

'செம போதை ஆகாதே', 'இமைக்கா நொடிகள்', 'ருக்குமணி வண்டி வருது', 'ஒத்தைக்கு ஒத்தை' என நான்கு படங்களில் நடித்து வரும் இளையதலைமுறை நடிகரான அதர்வா தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.