பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்தார்: அதிர்ச்சியில் திரையுலகம்

  • IndiaGlitz, [Friday,April 30 2021]


தமிழ் திரையுலகிற்கு கடந்த சில மாதங்களாகவே சோதனையான காலமாக உள்ளது. எஸ்பிபி, விவேக் உட்பட பல பிரபலங்கள் தொடர்ச்சியாக மறைந்து வரும் நிலையில் இன்று பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கேவி ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ உள்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும் இயக்குனருமான கேவி ஆனந்த் அவர்களுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

கேவி ஆனந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்களின் மறைவு இந்திய திரை உலகிற்கே மிகப் பெரிய இழப்பு என்று திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அயன், கோ, மாற்றான், அனேகன், காப்பான் போன்ற படங்களை இயக்கியுள்ள கே.வி.ஆனந்த் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை கடந்த 1995ஆம் ஆண்டு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.