'லெஜெண்ட் சரவணன்' நடிக்கும் அடுத்த படம்: அவரே கொடுத்த சூப்பர் அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடித்த ’லெஜெண்ட் ’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த சூப்பர் அப்டேட்டை அவரே தெரிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ’லெஜெண்ட் சரவணன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான ’லெஜெண்ட் என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும், குறிப்பாக இந்த படம் ஓடிடியில் வெளியான போது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் ஒரு சில முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’லெஜெண்ட் நடிக்கும் அடுத்த படம் பணி தொடங்கிவிட்டது, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் ’லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது. ’லெஜெண்ட் சரவணன் நடித்து இயக்கும் அடுத்த படத்தை இயக்குவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
All Set for#LegendsNext
— Legend Saravanan (@yoursthelegend) January 19, 2024
Process Started….
Revealing Soon…#Legend#LegendSaravanan#Anbanavan pic.twitter.com/O1Dmf88P4l
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments