நடித்த ஒரே படத்தின் இரண்டாம் பாகமா? லெஜண்ட் சரவணன் வேற லெவல் திட்டம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் ’லெஜண்ட்’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கும் நிலையில் அவரது அடுத்த படமாக இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’லெஜண்ட்’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் சுமாரான வெற்றியும் ஓடிடியில் நல்ல வரவேற்பையும் பெற்றது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் நடிக்க இருக்கும் இரண்டாவது படம் குறித்த தகவல் மிக விரைவில் விரைவாக வெளியாகும் என்றும் இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ’லெஜண்ட்’ படத்தின் இரண்டாம் பாகத்தையே உருவாக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க காஷ்மீரில் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் தான் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments