'தி லெஜண்ட்' திரைப்படம் இத்தனை கோடி லாபமா? சரவணன் வெளியிட்ட ஆச்சரிய தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சரவணா ஸ்டோர் தொழிலதிபர் சரவணன் நடிப்பில் உருவான ’தி லெஜண்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் மற்றும் பட்ஜெட் குறித்த தகவலை சரவணன் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 45 கோடி ரூபாய் என்றும் திரையரங்குகளில் கிடைத்த வசூல் மட்டும் 45 கோடி என்றும் சரவணன் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சாட்டிலைட் உரிமையை 20 கோடிக்கும் ஓடிடி உரிமை 25 கோடிக்கும் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் இந்த படத்தின் மொத்த லாபம் 45 கோடி என்றும் அவரது செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
‘தி லெஜண்ட்’ திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 45 கோடி தான் என அருள் சரவணன் தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் லெஜண்ட் சரவணன் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com