சுதந்திர தின விழாவில் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட லெஜண்ட் சரவணன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன் நடித்த ‘லெஜெண்ட்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று அவர் குழந்தைகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடினார். அப்போது அவர் கூறியதாவது:
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.. குழந்தைகள் எல்லாருமே தாய் தகப்பன் சொல்லை கேட்டு மதித்து வாழ்பவர்கள். ஏனெனில் இந்த உலகத்திலேயே தாய் தகப்பன் மாதிரி குழந்தைகளுக்கு நல்லது செய்பவர்கள், நல்லது நினைப்பவர்கள் யாருமே இல்லை. எனவே தாய் தகப்பன்கள் நமக்கு கடவுள் மாதிரி, அவர்கள் சொல்வதைக் கேட்டு மதித்து வாழ்ந்தால் தான் நாம் வாழ்க்கையில் முன்னேற முடியும்.
அதேபோல் தான் ஆசிரியர்கள்.. ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்கள் என்ன சொல்லிக் கொடுக்கிறார்களோ அதை படித்து, எவ்வளவு நல்ல மதிப்பெண் வாங்குகிறீர்களோ, அதுதான் உங்கள் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும். எனவே இது இரண்டையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.
மேலும் தனது அடுத்த படம் குறித்து அவர் கூறிய போது ’ஒரு நல்ல கதை அமைய வேண்டும் என்பதற்காக தான் காத்திருந்தேன், தற்போது ஒரு நல்ல கதை கிடைத்துவிட்டது, விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்
மேலும் குழந்தைகளுடன் லெஜண்ட் சரவணன் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்த படத்தின் அப்டேட்டை குழந்தைகளுடன் பகிர்ந்த
— Legend Saravanan (@yoursthelegend) August 15, 2023
தருணம்#Legend #Legendsaravanan @yoursthelegend pic.twitter.com/LocspXpDuX
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com