close
Choose your channels

லெஜண்ட் சரவணன் படத்தில் இணைந்த 3 பிரபலங்கள்: யார் யார்?

Sunday, September 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் மூன்று பிரபலங்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிரபல தொழிலாளர் லெஜண்ட் சரவணன் நடித்த 'லெஜண்ட்’ என்ற படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகிய இரண்டிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் 'எதிர்நீச்சல்’ முதல் ’கருடன்’ வரை பல வெற்றி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'லெஜண்ட்’ சரவணன் ஒரு திரைப்படத்தின் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நாயகியாக பயல் ராஜ்புத், மேலும் முக்கிய கேரக்டர்களில் ஷாம் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பேட்டி அளித்த சரவணன் இந்த படத்தில் தான் மேக்கப் இல்லாமல் நடித்திருப்பதாக கூறினார். மேலும் விஜய் அரசியல் குறித்தும் தான் அரசியலுக்கு வருவது குறித்து அந்த பேட்டியில் அவர் தெரிவித்து இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment