லெஜண்ட் சரவணன் படத்தில் இணைந்த 3 பிரபலங்கள்: யார் யார்?

  • IndiaGlitz, [Sunday,September 15 2024]

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் மூன்று பிரபலங்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிரபல தொழிலாளர் லெஜண்ட் சரவணன் நடித்த 'லெஜண்ட்’ என்ற படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகிய இரண்டிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் 'எதிர்நீச்சல்’ முதல் ’கருடன்’ வரை பல வெற்றி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'லெஜண்ட்’ சரவணன் ஒரு திரைப்படத்தின் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நாயகியாக பயல் ராஜ்புத், மேலும் முக்கிய கேரக்டர்களில் ஷாம் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பேட்டி அளித்த சரவணன் இந்த படத்தில் தான் மேக்கப் இல்லாமல் நடித்திருப்பதாக கூறினார். மேலும் விஜய் அரசியல் குறித்தும் தான் அரசியலுக்கு வருவது குறித்து அந்த பேட்டியில் அவர் தெரிவித்து இருந்தார்.

More News

குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியாளருக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்..!

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

செருப்படி வாங்குவார்: குக் வித் கோமாளி மணிமேகலை விவகாரம் குறித்து கூறிய பிரபலம்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து திரை உலகை சேர்ந்த பல்வேறு நபர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு Bullyஐ பத்தி இவ்வளவு சொல்றாங்க மணிமேகலை.. பாடகி சுசித்ரா கூறிய திடுக்கிடும் தகவல்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக மணிமேகலை கூறிய நிலையில், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஒரு தொகுப்பாளனி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

இப்படி ஒரு வேலையே எனக்கு வேணாம். அதுக்கு நான் வீட்லயே இருந்திடுவேன்: CWCயில் இருந்து விலகிய மணிமேகலை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வைத்து கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் மணிமேகலை ஆங்கராக இருந்த நிலையில் அவருக்கும் இதே நிகழ்ச்சியில் ஆங்கராக இருக்கும் ஒரு போட்டியாளருக்கும்

ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன தளபதி விஜய்.. நெட்டிசன்களின் ரியாக்சன்..!

இன்று கேரளாவில் உள்ள மக்கள் ஓணம் பண்டிகை கொண்டாடி வரும் நிலையில் அவர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்