லெஜண்ட் சரவணன் படத்தின் மோஷன் போஸ்டர்- டைட்டில் அறிவிப்பு!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணா நடிப்பில், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு ’லெஜண்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், என பான் -இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் என்பதும் வேல்ராஜ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
லெஜண்ட் சரவணன் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நடித்துள்ளார் என்பதும் இவர் மைக்ரோபயாலஜிஸ்ட் கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.