லெஜண்ட் சரவணன் படத்தின் ஆக்சன் காட்சி படப்பிடிப்பு: வைரல் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை அஜித், விக்ரம் நடித்த ’உல்லாசம்’ படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்கி வருகிறார் என்பதும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இந்த படத்தின் ஒரே ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் ரூ.10 கோடி செலவு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்பதும் இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. வேல்ராஜ் ஒளிப்பதிவில் அந்தோணி ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#LegendInAction
— Nikil Murukan (@onlynikil) March 1, 2021
Shooting in Full Swing #LegendSaravanan film
duo @JdJery Directorial@Jharrisjayaraj Musical@VelrajR DOP@AntonyLRuben Editing @moorthy_artdir -Art@Vairamuthu @SnehanMNM @pavijaypoet
@jdjeryofficial @onlynikil #NikilMurukan #NM pic.twitter.com/K5xBMppHO9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments