அடுத்த படத்திற்கு தயாராகிவிட்ட லெஜண்ட் சரவணன்: செம யூத் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சரவணா ஸ்டோர் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் அடுத்த படைப்பதற்காக தயாராகி வருவதாக கூறப்பட்டது. மேலும் முதல் படத்தில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்த லெஜண்ட் சரவணன், அடுத்ததாக ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதற்காக அவர் யூத் ஆக மாறுவதற்கு ஒர்க்கவுட் செய்து உடல் எடையை குறைத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான லெஜண்ட் சரவணன் புகைப்படத்தை பார்த்த பலரும் அவர் உடல் எடை குறைத்து இளைஞராக மாறிவிட்டதாக கூறினர்.
இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஸ்லிம்மாக இருப்பதை அடுத்து அவர் ரொமான்ஸ் நாயகனாக நடிக்க தயாராகி விட்டதாக கருதப்படுகிறது. லெஜண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Kick Started to Work after WorkOut
— Legend Saravanan (@yoursthelegend) September 19, 2022
Monday Vibes#TheLegend#LegendSaravanan pic.twitter.com/IEy8m9nqGi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com