மறக்க முடியாத நினைவுகள்: பத்மஸ்ரீ நடிகருக்க்கு புகழாரம் சூட்டிய லெஜண்ட் சரவணன்!

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகர் ஒருவரின் புகைப்படங்களை பதிவு செய்து அவருடனான மறக்க முடியாத நினைவுகள் குறித்து ட்வீட் செய்துள்ளார் .

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்ற போதிலும் நல்ல வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இணைந்த லெஜண்ட் சரவணன் அவ்வப்போது ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘தி லெஜண்ட்’ படத்தில் தன்னுடன் நடித்த சக நடிகரான பத்மஸ்ரீ விவேக் அவர்களுடன் நடித்தது மறக்க முடியாத நினைவாக இருந்தது என்று கூறி விவேக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. மேலும் ‘வி மிஸ் யூ விவேக் சார்’ என்று உருக்கமாக அவர் பதிவு செய்துள்ளதை பார்த்த ரசிகர்கள் ’விவேக் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரை இன்னும் யாரும் மறக்கவில்லை’ என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்