காஷ்மீரில் செம அப்டேட்டை வெளியிட்ட லெஜண்ட் சரவணன்.. வைரல் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ’தி லெஜெண்ட்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அவரது அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் லெஜண்ட் சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்த படத்தின் முக்கிய அப்டேட் விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளார்.
லெஜென் சரவணன் காஷ்மீரில் இருக்கும் அழகிய புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து 'நீங்கள் காத்திருக்கும் நேரம் நெருங்கி விட்டது, முக்கியமான அப்டேட்டுகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும்’ என்றும் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே அவர் சில பேட்டிகளில் அடுத்த படத்திற்கான கதையை கேட்டு வருவதாகவும் விரைவில் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியிருந்தார். அந்த வகையில் இன்னும் ஒரிரு நாளில் காஷ்மீரிலேயே லெஜண்ட் சரவணன் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லெஜண்ட் சரவணன் வெளியிட இருக்கும் அறிவிப்பு என்னவாக இருக்கும் என சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
The Wait is Nearing…
— Legend Saravanan (@yoursthelegend) February 24, 2023
Interesting Updates in few dates…#Legend#TheLegend#LegendSaravanan pic.twitter.com/iN5XvMse8O
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com