மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்.. பிரைடல் ஸ்டுடியோவை திறந்து வைத்த லெஜண்ட் சரவணன் பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடுமையாக உழைப்பவர்களை நேசிப்பவன் நான் என்றும், மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்றும் கோவையில் பிரைடல் ஸ்டுடியோவை திறந்து வைத்து நடிகர் மற்றும் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் கூறியுள்ளார்.
கோவையில் பிரைடல் மேக்கப் ஸ்டுடியோவை திறந்து வைத்து லெஜண்ட் சரவணன் மேலும் கூறியதாவது: கோவையில் கலை ரசனை உள்ளவர்கள் அவர்களுக்காக பிரைடல் மேக்கப் நூறு நிறுவனத்தை நூர் முகமது துவக்கி வைத்துள்ளார். அவருடைய கடினமான உழைப்பு பாராட்ட தகுந்தது. பொதுவாக நான் கடுமையாக உழைப்பவர்களை தொழிலை நேசிப்பவர்களை நான் நேசிப்பேன். எனக்கு பல்வேறு நிகழ்வுகளுக்கு அழைப்புகள் இருந்தாலும் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு செல்வதில்லை.
ஆனால் கலைத்துறையாளர்களுக்கு மேக்கப் துறை முக்கியம் பங்கு வைக்கிறது. அவற்றை முழுமையாக நேசித்து சேவை செய்து வருகிறார் நூர் முஹம்மது. அவருடைய அன்பால் ஈர்க்கப்பட்டு அவருடைய கடின உழைப்பை நேசித்து இந்த நிகழ்வுக்கு வந்துள்ளேன். மகிழ்ச்சி அளிக்கிறது. கோவை மக்களுக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று லெஜண்ட் சரவணன் கூறினார்.
மேலும் லெஜண்ட் சரவணன் கோவையில் செய்தியாளர் இடம் பேசும்போது, ‘என்னுடைய அடுத்த படத்தின் கதை விவாதம் சென்று கொண்டிருக்கின்றது. விரைவில் அறிவிப்பு வெளிவரும்’ என்று கூறினார். மேலும் நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்பதை மக்களும் மகேசனும் தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கோவையில் பிரைடல் மேக்கப் நூர் நிறுவனத்தை திறந்து வைத்த நடிகர் லெஜன்ட் சரவணன் ??#LegendSaravana #Legend #Saravana #TamilCinema @yoursthelegend pic.twitter.com/Yf1DCTQrIj
— IndiaGlitz - Tamil (@igtamil) December 12, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments