ஸ்டண்ட் காட்சியின்போது விபத்து.. 'லெஜென்ட்' பட நடிகைக்கு எலும்பு முறிந்தது..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ‘லெஜென்ட்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ஸ்டண்ட் காட்சியில் நடித்த போது விபத்து ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவரது எலும்பு முறிந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
லெஜெண்ட் சரவணன் நடித்த ‘லெஜென்ட்’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா, டாக்டர் மதுமிதா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இவர் பாலிவுட் திரையுலகில் பல படங்களில் பிசியாக இருக்கிறார் என்பதும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அவர் பாலகிருஷ்ணன் நாயகனாக நடிக்கும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் சண்டை காட்சி ஒன்று ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. அதில் ஊர்வசி சண்டை காட்சியில் டூப் இன்றி நடித்த போது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து அவர் தற்போது ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments