லெஜண்ட் சரவணன் படத்தின் பாடல் காட்சி! இத்தனை கோடி செலவா?


Send us your feedback to audioarticles@vaarta.com


சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் அருள் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது என்பது தெரிந்ததே இந்தப் படத்தை அஜித், விக்ரம் நடித்த உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 100 கோடி என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஒரே ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் ரூ.10 கோடி செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான நடனக்கலைஞர்கள், பிரமாண்டமான செட் என பணத்தை தண்ணீராக செலவு செய்து எடுக்கப்படும் இந்த பாடல் திரையில் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பாடல் காட்சியில் லெஜண்ட் அருள் சரவணனனுடன் நடிகை கீத்திகா திவாரி நடனம் ஆடிய காட்சிகள் படமாக்கப்பட்டது. மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக செலவு செய்து எடுக்கப்படும் இந்த படம் மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments