கேன்ஸ் விழாவில் முதலையை கழுத்தில் அணிந்த 'லெஜண்ட்' நடிகை: ரசிகர்களின் வேற லெவல் கமெண்ட்ஸ்..!

  • IndiaGlitz, [Thursday,May 18 2023]

தொழிலதிபர் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை முதலையை அணிகலனாக கழுத்தில் அணிந்து கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவுக்கு வேற லெவலில் ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டாலா ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் சுமார் 65 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் ஊர்வசி பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள், வீடியோ வைரலாகும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 74 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் ஊர்வசி ரவுட்டாலா கலந்து கொண்டுள்ளார். பிங்க் நிற உடை அணிந்து அவர் ஸ்டைலாக கேன்ஸ் விழாவில் சிவப்பு கம்பள விரிப்பில் நடந்து செல்லும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் அவர் தனது கழுத்தில் முதலையுடன் கூடிய அணிகலன்களை அணிந்தது தான் தற்போது இணையதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது. இதற்கு ஏராளமான ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஊர்வசி தற்போது இரண்டு ஹிந்தி படங்கள் மற்றும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.