7 நாளில் மன்னிப்பு. பீட்டா நிர்வாகிக்கு சூர்யா வழக்கறிஞர் நோட்டீஸ்

  • IndiaGlitz, [Saturday,January 21 2017]

ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிரியான பீட்டா அமைப்பு சமீபத்தில் நடிகர் சூர்யா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த கருத்துக்கு 7 நாட்களில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சூர்யாவின் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் பீட்டாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சூர்யாவின் 'சி 3' திரைப்படம் வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் கடந்த சில நாட்களாக சூர்யா ஈடுபட்டிருந்தார். இதுகுறித்து கருத்து கூறிய பீட்டா நிர்வாகி ஒருவர் 'சி 3', படத்தின் மலிவான விளம்பரத்திற்காக சூர்யா ஜல்லிக்கட்டு குறித்து பேசி வருவதாக கூறினார். இதற்கு சூர்யா தரப்பில் இருந்து தற்போது வக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சூர்யா ஏற்கனவே பலமுறை ஜல்லிக்கட்டுக்காகவும், மற்ற பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளார். 'சி 3' திரைப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் மலிவான விளம்பரம் தேடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. எனவே அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து கூறிய பீட்டா நிர்வாகி நிபந்தனையற்ற மன்னிப்பை எழுத்துமூலம் தெரிவிக்க வேண்டும். மேலும் அந்த மன்னிப்பு கடிதத்தை ஊடகங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் பீட்டா நிர்வாகிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

More News

மருத்துவமனையில் இருந்து மீண்டும் போராட்டக்களத்திற்கு திரும்பிய ராகவா லாரன்ஸ். சல்யூட்

சென்னை மெரீனாவில் கடந்த ஐந்து நாட்களாக இரவு பகல் பாராது, கடுங்குளிரையும் பொருட்படுத்தாது தன்னலமின்றி ஜல்லிக்கட்டு என்ற தமிழினத்தின் அடையாளத்திற்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் போராடி வருகின்றனர்...

வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் ஊற்றி மாணவ, மாணவிகள் போராட்டம்

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமின்றி பல நல்ல விஷயங்களுக்கு வழிகாட்டியாக அமைந்து வருகிறது. தங்களுக்காக உண்மையாக போராட ஒரு கூட்டம் இருக்கின்றது என்று பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது....

சுத்த தமிழில் வாழ்த்து கூறிய மலையாள சூப்பர் ஸ்டார்

ஜல்லிக்கட்டுக்காக அலைகடலென இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சென்னை மெரீனாவில் திரண்டு கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்...

சூர்யாவின் 'சி3' படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சி3' திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. சிங்கம், சிங்கம் 2 வெற்றி படங்களை அடுத்து மூன்றாம் பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...

மெரீனா ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் இளையதளபதி விஜய்

ஜல்லிக்கட்டு நடத்த தேவையான அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் கடந்த ஐந்து நாட்களாக சென்னை மெரீனாவில் போராடி வருகின்றனர்...