ஜெயலலிதாவின் எந்தெந்த சொத்துக்கள் பறிமுதல் ஆகும். நீதிமன்ற அதிகாரி விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சொத்துக்குவிப்பு வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட், சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகியோர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தது. அதேபோல் இந்த வழக்கின் A1 குற்றவாளியான ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இருப்பினும் சிறப்பு நீதிமன்றம் விதித்த அபராத தொகையான ரூ.100 கோடி கட்ட வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா கட்ட வேண்டிய அபராதத்தொகைக்காக அவருடைய எந்தெந்த சொத்துக்கள் பறிமுதல் செய்ய வேண்டும் என்பது குறித்து நீதிமன்ற சிறப்பு அதிகாரி பிச்சமுத்து பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்,. அதில் அவர் கூறியதாவது:
ஜெயலலிதா 1991 லிருந்து 1996 ஆம் ஆண்டு வரை அவர் வாங்கிய அல்லது ஆக்கிரமித்த சொத்துக்கள் ஏலம் விடப்படும் வாய்ப்புகள் உள்ளன. போயஸ்கார்டன் வீட்டின் இரண்டு தளங்களின் மீதும் கோர்ட் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஆனால் 1991க்குப் பிறகு கூடுதலாகக் கட்டப்பட்ட 31 ஏ என்ற எண்கொண்ட கட்டடத்தை பறிமுதல் செய்யலாம்.
சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், வாகனங்கள் ஆகியவற்றை ஏலம் விட்டு அபராதத் தொகையை வசூலிக்கலாம்.
ஜெயலலிதா 1991-96 வரை முதல்வராக இருந்த போது, தஞ்சை, நெல்லை, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் வாங்கப்பட்ட நிலங்களை ஏலத்தில் விட்டு வசூலிக்கலாம்.
ஐதரபாத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான திராட்சை தோட்டம் உள்ளது. ஆனால், அந்த சொத்து 1991ஆம் ஆண்டுக்கு முன்பே வாங்கப்பட்டுள்ளது. அதனால் அந்த திராட்சை தோட்டத்தை ஏலம் விட இயலாது. செகந்திராபாத்தில் ஜெயலலிதாவுக்கு இருக்கும் வீட்டையும் ஏலம் விட இயலாது.
ஜெயலலிதாவின் சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது என்று ஆராய்ந்து அவற்றை ஏலத்தில் விட்டு அபாரத தொகையை கர்நாடக அரசு வசூலிக்க வேண்டும். இதற்கென்று தனியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அது கர்நாடக அரசின் பொறுப்பு.
இவ்வாறு நீதிமன்ற சிறப்பு அதிகாரி பிச்சமுத்து கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout