கரகர குரலால் வேலை இழப்பு... நியாயம் கேட்ட பெண்மணிக்கு 1 கோடி கிடைத்த சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்த நாட்டிலுள்ள ஒரு பிரபல பல்கலைக்கழகத்தில் சத்தமாகப் பேசிய காரணத்தால் பெண் ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த அந்தப் பெண்மணிக்கு 1 கோடிக்கும் மேல் நஷ்டஈடு வழங்கப்பட்ட சம்பவம் கவனம் ஈர்த்திருக்கிறது.
இங்கிலாந்து நாட்டிலுள்ள எக்ஸிட்ர் எனும் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் டாக்டர் அனெட் ப்ளாட். இவர் கடந்த 29 வருடங்களாக அந்தப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தபோதிலும் திடீரென பணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு டாக்டர் ப்ளாட் சத்தமான குரலில் பேசுகிறார் என்றும் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு அவருடைய அணுகுமுறை பயப்படும் படியாக இருக்கிறது என்றும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான டாக்டர் ப்ளாட் தனக்கு நியாயம் வேண்டும் என நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். மேலும் தனக்கு இயற்கையாகவே சத்தமான குரல் வளம் இருக்கிறது. இதற்காக வேலையை விட்டு நீக்குவதா என நியாயம் கேட்டிருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாக்டர் ப்ளாட்டிற்கு 1 லட்சம் பவுண்ட் நஷ்டஈடு வழங்குமாறு பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு உள்ளது.
1 லட்சம் பவுண்ட் என்பது இந்திய மதிப்பில் 1 கோடிக்கு மேல் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் டாக்டர் ப்ளாட் இதன்மூலம் சத்தமான குரல் வளத்தைக் கொண்டிருப்பதெல்லாம் ஒரு குற்றமாகக் கருதி வேலையை விட்டு நீக்கிய பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தக்கப் பதிலடி கொடுத்திருக்கிறார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments