லெபனான் வெடிவிபத்து ராக்கெட் வீசியதால் ஏற்பட்டு இருக்கலாம்… பகீர் தகவலை வெளியிட்ட அந்நாட்டின் அதிபர்!!!

  • IndiaGlitz, [Saturday,August 08 2020]

கடந்த செவ்வாய் கிழமை (ஆகஸ்ட் 5) லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் அருகேயுள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட ஒரு வெடிவிபத்தால் இதுவரை 157 பேர் உயிழந்துள்ளனர். 6 ஆண்டுகளுக்கு முன்பு கப்பல்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.2,750 டன் அமோனியம் நைட்ரேட் துறைமுகத்திலுள்ள ஒரு கிடங்கில் சேமிக்கப்பட்டது எனவும் பராமரிப்பு இல்லாததால் அது வெடித்து சிதறியதாகவும் கடந்த புதன்கிழமை அந்நாட்டின் அதிபர் மைக்கேல் ஆன் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

மேலும், “எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த பிரச்சனையை சகிக்ததுக்கொண்டு இருக்க மாட்டேன்” எனவும் மைக்கேல் ஆன் காட்டமாகக் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் “வெடிபொருள் இருப்பு வைக்கப்பட்டிருந்த கிடங்கு மீது வெளியே இருந்த ராக்கெட் அல்லது குண்டு வீசியதால், இந்த கோர விபத்து நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளது” என்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த வெடிவிபத்தின் மீட்பு நடவடிக்கைகள் இன்னும் தொடரப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. உயிரிழப்பு 157 ஆக அதிகரித்து இருப்பதோடு இந்த விபத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பதகாவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஒரு நொடியில் வெடித்து சிதறிய அம்மோனியம் நைட்ரேட் துறைமுகத்தின் அருகே இருந்து நூற்றுக் கணக்கான கட்டடிடங்களை மண்ணுக்குள் அமிழ்த்தியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ள நிலையில் இந்த விபத்துக்கான வெளிப்படை விசாரணைத் தேவை என ஐ.நா. வலியுறுத்தி இருக்கிறது. ஆனால் சர்வதேச விசாரணை அமைப்பை அந்நாட்டின் அதிபர் மறுத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.