லெபனான் விபத்து!!! மக்கள் எதிர்ப்பு வலுத்தால் அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மேற்காசிய நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 4 ஆம் தேதி 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறிய விபத்தில் இதுவரை 160 பேர் உயிரிழந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகையே அதிர்ச்சியை அடைய வைத்த இந்த விபத்துக் குறித்து விரிவான விசாரணை தேவை என்று ஐ.நா வலியுறுத்திய நிலையில் வெளிநாடுகளின் விசாரணைக்கு லெபனான் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பல்லாயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தைத் தொடங்கவும் ஆரம்பித்தனர். அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் அவர்கள் இந்த விபத்துக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது. இதனால் முதற்கட்டமாக சுற்றுச்சூழல் அமைச்சர், உள்துறை மந்திரி மற்றும் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை விட்டு விலகவும் செய்தனர். ஆனாலும் மக்களின் போராட்டங்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வலுத்து வந்ததால் பெய்ரூட் துறைமுகத்தில் இராணுவம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதனால் மக்கள் கொதிப்படைந்து சாலைகளில் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்து எரிப்பது, அரசு அலுவலகங்களுக்கு தீ வைப்பது போன்ற பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
போராட்டங்களுக்கு நடுவே பல்வேறு இடங்களில் காவல் துறையினருடன் பொதுமக்களுக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தால் அடிதடி, சண்டை போன்ற நிகழ்வுகளும் அரங்கேறியது. இந்நிலையில் லெபனான் பிரதமர் ஹாசன் பதவி விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பால் பொதுமக்களின் போராட்டங்கள் முடிவுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. உலகையே அச்சுறுத்தும் வகையில் 6 ஆண்டுகளாக சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டு இருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறிய விபத்தில் பெய்ரூட் பகுதியைச் சுற்றியுள்ள 15 கி.மீ தூரத்திற்கு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் பல்லாயிரக் கணக்கான மக்கள் தற்போது வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகள் லெபனானுக்கு உதவிக்கரம் நீட்ட ஆரம்பித்து இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout