நெடுவாசல் செல்கிறேன். மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், நடிகருமான விஷால் நெடுவாசல் விவசாயிகளை காப்பாற்ற அங்கு நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொள்ள புறப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரியும் பிரச்சனையாக நெடுவாசல் போராட்டம் பார்க்கப்படுகிறது. பொன் விளையும் விவசாய பூமியை அழித்து அதில் ஹைட்ரோகார்பன் என்னும் மீத்தேன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு ஆளும் கட்சி உள்பட தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், திரையுலகினர் உள்பட அனைத்து துறையினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் போராட்டம் வலுபெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று 'ஒரு கனவு போல' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஷால் பேசியபோது, '''விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், நெடுவாசலைக் காப்பாற்றுங்கள். அரசியல்வாதிகளுக்கு நான் இதை முக்கிய வேண்டுகோளாக முன்வைக்கிறேன். என் அலுவலகத்தில் நெடுவாசல் விவசாயிகள் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நான் அந்த விவசாயிகளுடன் இணைந்து நெடுவாசல் புறப்படுகிறேன். நாளை முதல் நெடுவாசலில் மக்களோடு மக்களாக இணைந்து என் ஆதரவைத் தெரிவிக்க உள்ளேன்'' என்று கூறினார். இன்று காலை அவர் நெடுவாசல் போராட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout