ஆன்மீகத்தில் ஐக்கியமாகிவிட்ட முன்னணி நடிகை… வைரல் புகைப்படம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழின் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை அமலாபால் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2020 இல் நான் கற்றுக் கொண்டவை என்ற தலைப்பில் பல கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அதில் ஒன்றுதான் எனது குண்டலி சக்தியை வெளியே கொண்டு வந்தேன் என அவர் குறிப்பிட்டது. இதனால் அவர் யோகாவில் ஐக்கியமாகி விட்டார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று யோகா செய்வதைப் போன்ற சில புகைப்படங்களை மீண்டும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு சில கருத்துகளையும் தெரிவித்து இருக்கிறார். அதில் என் வாழ்க்கை ஒரு முழு வட்டத்திற்குள் வந்து விட்டது. இது ஆன்மீகத்தின் சிறந்த தொடக்கம் எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.
நடிகை அமலாபால் தன்னுடைய பதிவில், “நான் முதன் முறையாக ஈஷா யோகா மையத்திற்கு எனது 19 வயதில் வந்தேன். அப்போது 3 கேள்விகள் கேட்பதற்கு எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் எல்லா கேள்விகளுக்கும் தான் யோகா செய்வதாக சத்குரு பதில் அளித்தார். அந்த வார்த்தைகளின் வலிமை அப்போது எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவரது கருத்துகளை ஏற்றுக் கொண்டிருந்தால் நான் வாழ்க்கையில் எவ்வளவு மாற்றம் பெற்றிருப்பேன். சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு நான் அவரைச் சந்தித்தேன். என் வாழ்க்கை ஒரு முழுவட்டத்திற்கு வந்துவிட்டது. என்று நினைக்கிறேன். இது நனவான வாழ்க்கை மற்றும் ஆன்மீகத்தின் சிறந்த தொடக்கம்” என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதனால் நடிகை அமலாபாலின் ஆன்மீகத் தொடக்கத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழில் இவர் “அதோ அந்த பறவை போல” “கடாவர்“ போன்ற படங்களை நடித்து முடித்து இருக்கிறார். கன்னடத்தில் ஒரு வெப் சிரீஸிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்க உள்ளார். அதுதவிர இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் ஆந்தாலஜி சீரிஸிலும் இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments