பிரதீப் ரங்கநாதன் படத்தில் இணைந்த LCU நடிகர்.. ஜோடியாகும்'மெய்யழகன்' நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் ’டிராகன்’ திரைப்படத்தில் LCU நடிகர் இணைந்து உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக ஜோடியாகும்‘மெய்யழகன்’ படத்தில் நடித்த நடிகை நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’டிராகன்’. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இயக்குனர்கள் கே எஸ் ரவிக்குமார், மிஷ்கின், மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவரும் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் LCU படங்களில் தவறாமல் இடம்பெறும் நடிகர் ஜார்ஜ் மரியான் ’டிராகன்’ படத்தில் தனபால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக சித்ரா என்ற கதாபாத்திரத்தில் ’மெய்யழகன்’ உள்பட பல படங்களில் தனது நடிப்பு முத்திரையை வெளிப்படுத்திய இந்துமதி மணிகண்டன் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த படத்தில் நட்புக்காக சில சிறப்பு தோற்றத்தில் சில முக்கிய நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும், அது குறித்து தகவல் வெளியாகும் போது ரசிகர்கள் ஆச்சரியப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், லியோ ஜேம்ஸ் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
And that’s it guys with character announcment for @pradeeponelife starrer Dragon 🐉 Some very special ‘ natpukaga’ characters are there which will be a surprise for u all in theatres 😈😈😈 see u with next update soon ♥️@Ags_production @archanakalpathi @aishkalpathi
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) November 10, 2024
We are pleased to have #GeorgeMaryan sir as Dhanapal & #IndumathyManikandan ma’am as Chitra ! Dragon is incomplete without you both ♥️♥️@pradeeponelife in & as #Dragon
— AGS Entertainment (@Ags_production) November 10, 2024
A @Dir_Ashwath Araajagam 💥🧨
A @leon_james Musical 🎵#PradeepAshwathCombo#KalpathiSAghoram… pic.twitter.com/boqQnSfVSv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com