டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 'லட்சுமி பாம்' படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,April 28 2020]

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது. இதனை அடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ள பல சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது

ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ உட்பட ஒரு சில படங்களில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு சில பெரிய பட்ஜெட் படங்களும் ஓடிடி பிளாட்பாரத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப் போவதாக வதந்திகள் வெளிவந்தன. விஜய்யின் ’மாஸ்டர்’, ரன்வீர்சிங்கின் ‘83’உள்பட ஒருசில பெரிய பட்ஜெட் படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக இருப்பதாக வதந்திகள் வெளியானதை அடுத்து இந்த வதந்திக்கு அந்தந்த படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைத்து மேற்கண்ட படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்னரே ஓடிடி-யில் வெளியாகும் என்று தெரிவித்தனர்

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகி உள்ள ‘லட்சுமி பாம்’ என்ற திரைப்படமும் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிட இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது லட்சுமி பாம்’ திரைப்படம் எந்த ஓடிடி பிளாட்பாரத்திலும் நேரடியாக ரிலீஸ் செய்யப்படாது என்றும் கொரோனா பரபரப்பு முடிந்த பின் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது

மேலும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன பிறகு இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டார்-இல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் ரிலீஸ் செய்யும் தேதி குறித்த தகவல் மிக விரைவில் படக்குழுவினர் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ’லட்சுமி பாம்’ திரைப்படமும் ஓடிடி பிளாட்பாரத்தில் நேரடி ரிலீஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

More News

விஜயகாந்தின் ஒரே ஒரு போன்கால்: அந்தமான் மீனவர்களுக்கு போய் சேர்ந்த உதவிகள்

அந்தமானில் தமிழக மீனவர்கள் ஊரடங்கு காரணமாக உணவு உள்பட அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் இருப்பதை அறிந்து விஜயகாந்த் அவர்களுக்கு உதவி செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வர தடை: தமிழக அரசின் அதிரடி முடிவு

கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக விலகலை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று சென்னையில் மிக அதிகமாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளை மீண்டும் பால்கனி அரசுகள் என விமர்சித்த கமல்ஹாசன்!

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசை பால்கனி அரசு என விமர்சனம் செய்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன

இந்த அரசு சுத்த வேஸ்ட்: மீராமிதுன் பகீர் குற்றச்சாட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளரான மீராமிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடனும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஒருமுறை கொரோனா பாதித்தவருக்கு மீண்டும் கொரோனா வருமா??? WHO என்ன சொல்கிறது???

உலகில் பல நாடுகள், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளவர்கள் இயல்பான வேலைகளுக்கு திரும்பலாம் எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றன.