'லக்‌ஷ்மன் ஸ்ருதி' ராமன் திடீர் மறைவு: திரையுலகினர் இரங்கல்

  • IndiaGlitz, [Wednesday,December 25 2019]

பிரபல மேடைக்கச்சேரி இசையமைப்பாளர் (லக்‌ஷ்மன் சுருதி) லக்‌ஷ்மன் அவர்களின் சகோதரர் ராமன் அவர்கள் நேற்றிரவு 9 மணி அளவில் காலமானார். அவருடைய மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராமன் மறைவு குறித்து நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் ’மிக இனிய நண்பரும் இசை உலகத்திற்கு உற்ற ஊக்குவிப்பாளருமான லகஷ்மன் ஸ்ருதி “ ராமன்” திடீர் மறைவு எனக்கு பேரதிர்ச்சி. அவரை இழந்து நிற்கும் லக்‌ஷ்மன், மற்றும் அவர் இசைக்குழு, அவர் குடும்பத்தாருக்கு, என் பயனற்ற ஆறுதல்கள்’ என்று கூறியுள்ளார்.

லகஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் இயக்குனராக இருந்த ராமன் அவர்களின் மறைவு அந்த இசைக்குழுவிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.