17 பேர்களுக்கு ஆதரவாக ஆஜராக்கும் வழக்கறிஞர் யார்? பார் சங்க தலைவர் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 12 வயது சிறுமியை மனிதர்கள் என்ற போர்வையில் இருக்கும் 21 மிருகங்கள் கடந்த 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளன. இன்று அவர்களில் 17 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த 17 பேர்களை சட்டக்கல்லூரி மாணவர்களும், வழக்கறிஞர்களும் தர்ம அடி கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டோம் என சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அதையும் மீறி யாராவது அந்த 17 பேர்களுக்கு ஆதரவாக ஆஜரானால் அவர்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் வழக்கறிஞர்கள் இல்லாமலேயே இந்த வழக்கு நடக்கும் என்று தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com