பதவியேற்பை தடுத்து நிறுத்துமாறு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு. ஜெ. வழக்கறிஞர் மனுதாக்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுகவின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆளுனரின் அழைப்பை ஏற்று இன்னும் சற்று நேரத்தில் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் இந்த பதவியேற்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு நீண்ட காலம் தனிப்பட்ட வழக்கறிஞராக பணியாற்றி அனுபவம் கொண்ட ஜோதி என்ற வழக்கறிஞர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார், இந்த வழக்கு நீதிபதிகள் ரமேஷ் குலுவாடி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்னும் சில நிமிடங்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுனர் எடப்பாடி பழனிச்சாமியை அழைப்பு விடுத்தவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர் சென்னை ஐகோர்ட் சென்று வழக்கறிஞர் ஜோதியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout