'பாகுபலி' - 'காஞ்சனா 2' இணையும் 'வீரபலி'

  • IndiaGlitz, [Monday,October 26 2015]

இந்திய அளவில் சூப்பர் ஹிட் ஆன 'காஞ்சனா 2' இயக்குனர் ராகவா லாரன்ஸ் மற்றும் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆன 'பாகுபலி' நாயகன் பிரபாஸ் ஆகிய இருவரும் இணைந்த 'ரிபல்' என்னும் தெலுங்கு படம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாகாங்களில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது.

பிரபாஸூக்கு ஜோடியா தமன்னா மற்றும் தீக்ஷா சேத், பிரமானந்தம், கோவை சரளா உள்பட பலர் நடித்திருந்த இந்த தற்போது தமிழில் டப்பிங் ஆகி வருகிறது. இந்த படத்திற்கு 'வீரபலி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழ் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு ராகவா லாரன்ஸ் அவர்களே இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து சூப்பர் ஹிட் டியூனை இந்த படத்திற்காக ராகவா லாரன்ஸ் கம்போஸ் செய்துள்ளார். 'வீரபலி' படத்தின் இசை வெளியீட்டு தேதி மற்றும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

'காக்கி'க்காக பேச்சுவார்த்தை நடத்தும் 'விஜய் 59' குழுவினர்

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' திரைப்படத்திற்கு தலைப்பு கிட்டத்தட்ட தயாராகிவிட்டது.....

தீபாவளி தினத்தில் அஜீத் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படம் இன்று சென்சார் அதிகாரிகளால் சென்சார் செய்யப்படும்...

'நான் ஈ' புகழ் நானி கேரக்டரில் ஜி.வி.பிரகாஷ்?

'டார்லிங்' மற்றும் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' வெற்றி படங்களை அடுத்து இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்...

சுந்தர் சியின் அடுத்த படத்திலும் பேய்?

அரண்மனை' வெற்றி படத்தை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 'அரண்மனை 2' என்ற பெயரில் இயக்குனர் சுந்தர் சி இயக்கி வருகிறார்...

ரஜினியின் கபாலிக்கு கிடைத்த பச்சைக்கொடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' திரைப்படத்தின் சென்னை படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் படக்குழுவினர் மலேசிய செல்லவுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே...