இளம் நடிகரின் மூன்றாவது படத்திற்கு உதவி செய்த லாவண்யா திரிபாதி!

  • IndiaGlitz, [Tuesday,December 29 2020]

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கிரண் அப்பாவரம் நடிக்கும் மூன்றாவது படத்தின் ஒரு காட்சியில் நடிகை லாவண்யா திரிபாதி வெளியீட்டு உதவி செய்துள்ளார்

இளம் நடிகர் கிரண் அப்பாவரம் ‘ராஜா வாரு ராணி வாரு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் ‘எஸ்ஆர் கல்யாண மண்டபம்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது அவர் ’செபாஸ்டியன் பேசிய 524’ என்ற படத்தில் நடித்து வருகிறார்

இயேசு கிறிஸ்து பிறந்த நாளான கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்த ஒரு கிறிஸ்தவராக நடிக்கும் கிரண் அப்பாவரம், இந்த படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடித்து வருகிறார். ஒருவர் தாடியுடனும் இன்னொருவர் கிளீன் ஷேவ்உடன் காவல்துறை அதிகாரியாகவும் நடித்து வருகிறார்

இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை நடிகை லாவண்யா திரிபாதி வெளியிட்டதை அடுத்து அந்த காட்சியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ’சாஹோ’ படத்திற்கு பின் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கும் நேரடி தெலுங்கு படமான இந்த படத்தை பாலாஜி சய்யபுரெட்டி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படமும் கிரண் அப்பாவரம் நடித்த இரண்டு படங்கள் போலவே வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது