'லியோ' சிறப்பு காட்சி விவகாரம்.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முக்கிய தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,October 17 2023]

தளபதி விஜய் நடித்த 'லியோ’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ்நாடு தவிர பல மாநிலங்களில் அதிகாலை 4 மணி, 7 மணி காட்சிகள் திரையிடப்படும் நிலையில் தமிழ்நாட்டில் 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது

இந்த நிலையில் நேற்று 'லியோ’ திரைப்படத்தை 4 மணி, 7 மணி காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இன்றைய விசாரணையின் முடிவில் தான் 'லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என்பது தெரியவரும்.

இந்த நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். ’தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் 2 சிறப்பு காட்சிகள் உட்பட 6 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் தற்போது 5 காட்சிகளுக்கு அனுமதி அளித்திருப்பதால் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கும்

சினிமா துறையுடன் அரசு நட்போடு உள்ளது ஆனால் அதே நேரத்தில் நீதிமன்றம் எடுக்கும் முடிவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.