சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர்களுக்கு அடி-உதை: நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 21 பேர் கொண்ட ஒரு கும்பல் சுமார் 7 மாத காலமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களில் அந்த அபார்ட்மெண்டின் செக்யூரிட்டிகளும் அடங்கும். இந்த நிலையில் 21 பேர்களில் தற்போது 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 பேர்களும் இன்று சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். விசாரணை முடிந்து வெளியே வந்த 17 பேர் மீது திடீரென சட்டக்கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கியதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டக்கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் சிலரும் தாக்கியதாக கூறப்படுகிறது. மிருகத்தனமான பாலியல் கொடுமை செய்த அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பெரும்பாலானோர் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com