சி.வி.குமாரின் முதல் படத்தில் சசிகுமார் நாயகி
Saturday, February 13, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றி படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர் தற்போது இயக்குனராகியுள்ளார். இவர் இயக்கவுள்ள படம் ஒன்றை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
சி.வி.குமார் இயக்கும் முதல் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான் மற்றும் லாவண்யா திரிபாதி ஆகியோர் நடிக்கின்றனர். லாவண்யா திரிபாதி ஏற்கனவே தமிழில் சசிகுமார் நடித்த 'பிரம்மன்' படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் குறித்து லாவண்யா கூறியதாவது, "நானும் சந்தீப் கிஷானும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவருடன் பணிபுரிவதில் மிகுந்த மகிழ்ச்சி. படப்பிடிப்பு நாளை மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.
இந்த படத்தில் நாயகியாக நடிக்க முதலில் நடிகை டாப்சியிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கால்ஷீட் தேதிகள் ஒத்துவராததால் தற்போது லாவண்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment