ஜெட் வேகத்தில் வழியும் எரிமலை குழம்புகள்… ஸ்பெயினில் தொடரும் பதற்றம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஸ்பெயின் நாட்டில் உள்ள லா-பால்மா தீவில் பல ஆண்டுகளாக கனன்று கொண்டிருந்த எரிமலை ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 19) வெடித்து சிதறியது. இதில் இருந்து கிளம்பும் தீப்பிழம்புகள் தற்போது 20 போர் விமானங்களின் வேகத்தை விட அதிகமாக இருப்பது கணிக்கப்பட்டு உள்ளது.
லா-பால்மா தீவில் பல ஆண்டுகளாகப் புகைந்து கொண்டிருந்த கும்ரே வியெகா எனப்படும் எரிமலை வெடித்து சிதறிவிடும் என்ற தகவல் கிடைத்தவுடன் கடந்த 2 வாரங்களாக அங்குள்ள மக்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது சொந்த இடத்தைவிட்டும், வீட்டை விட்டும் புலம்பெயர்ந்து உள்ள சமயத்தில் கும்ரே வியெகா எரிமலை வெடித்து சிதறி இருக்கிறது. இதனால் பல நூற்றுக்கணக்கான வீடுகள் தற்போது எரிமலை குழம்புக்குள் சிக்கி நாசமாகி வருகின்றன.
மேலும் எரிமலையை சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் கால்நடைகளை மீட்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. கால்நடைகளை மீட்கும் பணியில் போலீசாரும் அந்நாட்டு இராணுவமும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் எரிமலையில் இருந்து கிளம்பும் தீப்பிழம்புகள் 20 போர் விமானங்களின் வேகத்தைவிட அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல கிட்டத்தட்ட 8 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் எரிமலை குழம்பு வெளியேறும் சத்தமும் கேட்டுக் கொண்டிருக்கிறதாம். ஸ்பெயின் நாட்டின் லா-பால்மா தீவு மற்றும் கனரி தீவில் இதுபோன்ற எரிமலைகள் தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 1971 ஆம் ஆண்டு கனரி தீவில் வெடித்த எரிமலை குழம்பால் பலத்த சேதம் ஏற்பட்ட போதிலும் உயிரிழப்பு ஏதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது கும்ரே வியெகா எரிமலை வெடித்து சிதறி இருப்பதால் பல ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த வீடுகளை இழந்துள்ளனர். மேலும் அந்த எரிமலையைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலமும் பாலடைந்து இருக்கிறது. மேலும் எரிமலை வெடிப்பால் ஸ்பெயின் நாட்டில் கடும் பதற்றம் ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments