இது ஒரு தேவை இல்லாத உயிரிழப்பு: லதா ரஜினிகாந்த்
- IndiaGlitz, [Tuesday,October 29 2019]
இரண்டு வயது சுஜித் ஆழ்துளையில் உயிரை விட்ட துயரமான சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிவிட்டது. இந்த ஒரு உயிரிழப்பிற்கு பின்னர் கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேலான மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை அரசு நிர்வாகமும், தனியார் அமைப்புகளும் தனிநபர்களும் மூடியுள்ளனர். இந்த ஒரு விழிப்புணர்வு தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.
இருப்பினும் சிறுவன் சுஜித்தை மீட்க முடியாதது நமது நிர்வாகத்தின் குறைபாடாகவும், சரியான திட்டமிடல் இல்லாததையும் காட்டுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுஜித்தின் மறைவு குறித்து ரஜினிகாந்த் அவர்களின் மனைவி லதா ரஜினிகாந்த் கூறியபோது,‘சுஜித்தின் இறுதி நேர தவிப்பை வார்த்தைகளில் விளக்க முடியாது. எனவே குழந்தைகளுக்காக மட்டுமே முழுநேரம் செயல்படும் குழுவை அமைக்கவுள்ளோம். சுஜித்தின் நிலை குறித்து ரஜினிகாந்த என்னிடம் கேட்டவாறே இருந்தார், இது ஒரு தேவை இல்லாத உயிரிழப்பு’ என்று கருத்து கூறியுள்ளார். மேலும் சுஜித்தை மீட்க கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.