கவர்னருடன் லதா ரஜினிகாந்த் முக்கிய சந்திப்பு

  • IndiaGlitz, [Wednesday,August 10 2016]

இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி சமீபத்தில் புதுவை மாநிலத்தின் கவர்னராக பொறுப்பேற்று அம்மாநிலத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக புதுவையை தூய்மையாக்க அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை புதுவை மாநில வளர்ச்சிக்கு நல்லெண்ணத் தூதராக நியமிக்க கிரண்பேடி தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். ரஜினி இதுவரை இதுகுறித்த முடிவை தெரிவிக்காத நிலையில் தற்போது ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், கிரண்பேடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பை கிரண்பேடி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பில் புதுவை மாநிலத்தின் நல்லெண்ண தூதராக ரஜினி பொறுப்பேற்பது குறித்து பேசப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

More News

தனுஷுக்கு டான் ஆகும் இயக்குனர் சிவா

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஜெயில் செட்டில் நடைபெற்று வருகிறது...

17 வருடத்திற்கு பின்னர் மீண்டும் இணையும் ரகுமான் - ரஹ்மான்

புதுப்புது அர்த்தங்கள், சங்கமம், உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ரகுமானும், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானும் நெருங்கிய உறவினர்கள் என்பது அனைவரும் அறிந்ததே...

'அச்சம் என்பது மடமையடா' ரிலீஸ் தேதி.

தனுஷ் நடித்துள்ள 'தொடரி' திரைப்படமும் சிம்பு நடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும்...

ஜி.வி.பிரகாஷின் 'கிக்' செய்த மிகப்பெரிய சாதனை

ஒரு திரைப்படம் தயாரிப்பில் இருக்கும்போதே ஃபர்ஸ்ட்லுக், டீசர், டிரைலர், இசை வெளியீடு ஆகியவை வெளியிடும்...

'கபாலி'க்கு கிடைக்கும் மேலும் ஒரு வித்தியாசமான வருமானம்

கோலிவுட் திரையுலகில் வெற்றி பெற்ற படங்களில் நடித்த நடிகர்களின் உடை, பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை ஏலம் விடப்படுவது கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது...