அன்பு ஒன்றுதான் வெல்லும்: லதா ரஜினிகாந்த் எழுதி, இசையமைத்து, பாடிய பாடல் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஒரு சிறந்த பாடகி என்பதும் அவர் ஒரு சில திரைப்படங்களில் பாடியுள்ளார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக கமலஹாசன் நடித்த ’டிக் டிக் டிக்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’நேற்று இந்த நேரம்’ என்ற பாடல், ’அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் இடம்பெற்ற ’கடவுள் உள்ளமே’ என்ற பாடல், மற்றும் வள்ளி, கோச்சடையான் படங்களிலும் அவர் பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் லதா ரஜினிகாந்த் எழுதி இசையமைத்து பாடிய ஒரு பாடல் நேற்று வெளியாகியுள்ளது. அன்பு ஒன்றுதான் உலகில் சிறந்தது’ என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக குழந்தைகளிடம் லதா ரஜினிகாந்த் அன்பாக இருக்கும் காட்சிகள் இந்த பாடலின் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் ’அன்பின் முன்பு எல்லாமே மறந்து போகும்’ என்றும் ’மதுவுக்கு அடிமையாக கிடக்கும் மனிதர்கள் மனதை அழிப்பான் தன்னை மறப்பான்’ என்றும் அந்த பாடலில் லதா ரஜினிகாந்த் எழுதிய வரிகள் பாராட்டை பெற்று வருகின்றன.
பீஸ் பார் சில்ட்ரன்ஸ் (Peace for Children) என்ற அமைப்பின் மூலம் குழந்தைகள் மேம்பாடு குறித்த நிகழ்ச்சிகளை நடத்திவரும் லதா ரஜினிகாந்த் தற்போது குழந்தைகள் மற்றும் அன்பு குறித்து பாடிய இந்த பாடலை தங்களது சமூக வலைதளங்களில் தனுஷ், ராகவா லாரன்ஸ் உள்பட பல பிரபலங்கள் பதிவு செய்து, இந்த பாடலை எழுதி, இசையமைத்துப் பாடிய லதா ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளையே
— Dhanush (@dhanushkraja) July 30, 2020
தனது உலகமாக
மாற்றிக்கொண்ட
தாய்
உள்ளத்தில் இருந்து
ஒரு பாடல் .. @latharajnikanth
அற்புதம் !!! அன்புதானே எல்லாமே https://t.co/4ChYr51gAs
Such a heart touching song Ma. I can feel your true love for children’s. I pray Raghavendra swami for all your wishes to come true ?? @latharajnikanth https://t.co/qLTr5yyyhk
— Raghava Lawrence (@offl_Lawrence) July 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments