லதா ரஜினி உதவியால் காணாமல் போன 3 வயது சிறுமி மீட்பு
- IndiaGlitz, [Tuesday,January 08 2019]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மனைவி லதா ரஜினிகாந்த் சமீபத்தில் காணாமல் போன குழந்தைகளை மீட்கும் ஒரு அமைப்பை தொடங்கினார் என்பதும் இந்த அமைப்பின் தொடக்கவிழா சமீபத்தில் நடந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சென்னை அருகே உள்ள திருப்போரூர் பகுதியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை கடந்த அக்டோபர் மாதம் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து போலீசிடம் புகார் அளித்த நிலையில் போலீசார் கடந்த மூன்று மாதங்களை குழந்தையை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் குழந்தையின் பெற்றோரை தொடர்பு கொண்ட லதா ரஜினி, அவர்களுக்கு தைரியம் கூறியதோடு, இந்த குழந்தையை மும்பையில் தன்னுடைய அமைப்பை சேர்ந்த ஒரு பார்த்ததாகவும், மும்பையில் உள்ள பிரபலம் ஒருவர் மூலமாக மும்பை கமிஷனரிடம் பேசி, குழந்தையை மீட்பது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்துக்கெண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் லதா ரஜினி கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர வேட்டை நடத்தி குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.