close
Choose your channels

'ஜெயிலர்' திரைப்படத்தில் ரஜினி மனைவியும் நடித்துள்ளாரா? 

Tuesday, December 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியான நிலையில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தும் இந்த படத்தில் நடித்துள்ளாரா? என்ற கேள்வியை ஆச்சரியத்துடன் எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரஜினிகாந்த் தனது 72-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் வீடியோ வெளியானது. அட்டகாசமாக இருந்த இந்த வீடியோவில் உள்ள ரஜினியின் ஸ்டைலை அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்

இந்த நிலையில் இந்த வீடியோவை உற்றுப் பார்த்த சில ரசிகர்கள் இந்த வீடியோவில் ஒரு புகைப்படம் இருப்பதை பார்த்துள்ளனர். அந்த புகைப்படத்தில் ரஜினி தனது மனைவியுடன் லதாவுடன் இருப்பது போன்று காட்சி உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் ரஜினியின் மனைவி லதா நடித்துள்ளாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்.

ஆனால் இதுகுறித்து படக்குழுவினர்களிடம் இருந்து எந்தவித தகவலும் வெளிவரவில்லை என்பதால் படம் வெளிவந்தால் தான் லதா இந்த படத்தில் நடித்துள்ளாரா? என்பது தெரிய வரும்.

நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment