close
Choose your channels

மீண்டும் முதல் காதலுக்கு திரும்பிய த்ரிஷா

Thursday, October 15, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் நடிகை த்ரிஷா சமீபத்தில் பிரபல தொழிலதிபர் வருண் மணியன் அவர்களை காதலித்து அவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டதும், பின்னர் அதை அவர் முறித்து கொண்டார் என்பதை அனைவரும் அறிவர். இந்நிலையில் த்ரிஷா மீண்டும் தனது முதல் காதலுக்கு திரும்பியுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சூரியன் மறைந்த பின்னர் நீச்சல் குளத்தில் ஜாலியாக குளிப்பதுதான் தன்னுடைய முதல் காதல் என்று அவர் அடிக்கடி பல பேட்டிகளில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சமூக வலைத்தள பக்கத்தில் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்து "Back 2 my 1st love" என்றும் த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.

த்ரிஷா நடித்த 'தூங்காவனம்' வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது 'அரண்மனை 2', போகி, நாயகி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment