கார்கில் நினைவிடத்தில் அஜித் என்ன செய்தார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் தற்போது வட இந்தியாவில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் அவர் கார்கில் நினைவிடத்திற்கு சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகர் அஜித் தற்போது தனது குழுவினருடன் லடாக் பகுதியில் பைக்கில் சுற்றி வருகிறார் என்பதும் இந்த குழுவில் அவருடன் ’ஏகே 61’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை மஞ்சுவாரியர் உள்ளார் என்பதும் தெரிந்ததே. இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கரடுமுரடான சாலைகளில் அஜித் பைக் ஓட்டும் காட்சிகள், ஆற்றை கடந்து அவர் பைக் ஓட்டும் வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் கார்கில் நினைவிடத்திற்கு அஜித் சென்று அங்கு கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு சல்யூட் அடித்து மரியாதை மரியாதை செலுத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் அத்துடன் அங்கிருந்த ஒரு சில ராணுவ வீரர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜீத் நடிப்பில், வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ’ஏகேஎ 61’ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest Click of Ajith at Kargil war memorial ♥️#Ajithkumar #AK61 #Ajith #AK #KargilWarMemorial pic.twitter.com/JSVAsgrQx4
— IndiaGlitz - Tamil (@igtamil) September 8, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com