வேதாளம்' படத்தின் ஆச்சரியபட வைக்கும் வியாபாரம்.

  • IndiaGlitz, [Saturday,September 26 2015]

அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் பெரும்பகுதி முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. டைட்டில் அறிவிப்பதற்கு முன்னரே ஒருசில ஏரியாக்களின் வியாபாரம் நடந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட முழு வியாபாரமும் முடிந்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே 'வேதாளம்' சுமார் ரூ.40 கோடி அளவில் நடந்துள்ளதாகவும், இதுவரையிலான அஜீத் பட வியாபாரங்களில் இதுவே பெரிய தொகை என்றும் கூறப்படுகிறது.

தமிழகம் தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வெளிநாட்டு உரிமைகளின் வியாபாரங்களும், வெளிநாடு மற்றும் தொலைக்காட்சி உரிமைகளின் வியாபாரங்களின் தொகையை சேர்த்தால் மிகப்பெரிய தொகையாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்தாஸ், ராகுல்தேவ், சூரி, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது.

More News

தேர்தல் முடிந்தாலும் இனி ஒற்றுமையாக முடியாது. சரத்குமார்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் ...

'வேதாளம்' படத்தின் வியப்பான வியாபாரம்

ஒருபக்கம் இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் முன்பதிவு மற்றும் ரிலீஸுக்கு முந்தைய ஏற்பாடுகள்...

அஜீத்தின் கொள்கையை அப்படியே பின்பற்றும் சிம்பு?

படத்தொடக்க விழா, புரமோஷன் விழா, ஆடியோ விழா என எந்த விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை என்ற கொள்கையில் இருக்கும் அஜீத்...

சென்னை மாயாஜாலில் 'புலி' செய்த மற்றொரு சாதனை

இளையதளபதி விஜய்யின் 'புலி' திரைப்படம் விஜய் படங்களின் மேலும் ஒரு படம் என்ற வகையில்...

பாபிசிம்ஹாவின் 'கோ 2'வில் ஹன்சிகா?

தல அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில்...