மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு மிக உயர்ந்த விருது அறிவிப்பு!
- IndiaGlitz, [Monday,January 25 2021]
மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது
பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார். அவரது மறைவு இசைத்துறைக்கு மாபெரும் இழப்பு என்று திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்
இந்த நிலையில் எஸ்பிபி அவர்களுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருது அளிக்க வேண்டும் என்று திரையுலகினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பத்மவிபூஷன் என்ற உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு மட்டுமன்றி சிற்பக் கலைஞர் சுதர்சன் சாஹோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர்களுக்கும் பத்மவிபூஷன் விருது அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் 2011 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ள நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதைப் பெற்றுள்ளார். சரியாக ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை அவர் இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளான பத்ம விருதுகளில் ஒன்றை பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது